Home செய்திகள் மண்டபம் அருகே வேதாளையில் வீர முத்தரையர் சங்கத்தினர் ரத்த தானம்

மண்டபம் அருகே வேதாளையில் வீர முத்தரையர் சங்கத்தினர் ரத்த தானம்

by mohan

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1345 ஆம் ஆண்டு சதய விழாவையொட்டி இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் நான்காம் ஆண்டு ரத்த தான முகாம் வேதாளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று (19/5/20203 நடந்தது. அரசு ரத்த வங்கி டாக்டர் கே.பாத்திமா ஃபத்துல் ராணி தலைமையில், மண்டபம் ஊராட்சி ஒன்றிய வேதாளை கவுன்சிலர் ஜெ.தவ்பீக் அலி, ரத்த தான முகாம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் எஸ். அய்யப்பன் முன்னிலையில் ஊராட்சி தலைவர் ஜெ.அல்லா பிச்சை, மண்டபம் காவல் ஆய்வாளர் கே.சபரிநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதில் 50க்கும் மேற்பட்ட முத்தரையர் இளைஞர்கள் ரத்த தானம் செய்தனர். வேதாளை ஊராட்சி துணைத் தலைவர் எஸ்.சந்திரகலா, ஊராட்சி முன்னாள் தலைவர் எஸ். சிவசக்தி பெருமாள், ஊராட்சி உறுப்பினர் எம்.சீனி அப்துல் காதர், வீர முத்தரையர் முன்னேற்ற சங்க மாவட்ட அமைப்பாளர் சில.சரவணன், மாவட்ட துணை தலைவர் கே.செல்லம்,திருப்புல்லாணி ஒன்றிய அமைப்பாளர் ஏ.சுப்ரமணியன், இளைஞரணி அமைப்பாளர் சி.சதீஷ்குமார், வழக்கறிஞர் ஜி.தமிழ் வேந்தன்,ராமநாதபுரம் ஒன்றிய அமைப்பாளர் பி. மலைச்சாமி, ராமேஸ்வரம் ஒருங்கிணைப்பாளர் து.பாலமுருகன் வலையர் வாடி கிராம தலைவர் ஏ.அன்பழகன், செயலாளர் எஸ்.செல்வம், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.ஆனந்த், ஜி.காளிதாஸ், பி.நாகசுந்தரம், என்.பாலமுருகன், ஆர்.ரஞ்சித், பா.கோகுல கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். குருதி கொடையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!