Home செய்திகள் கீழக்கரை செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

கீழக்கரை செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

by mohan

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி 17ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. முஹம்மது சதக் அறக்கட்டளை கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் தாளாளர் முஹம்மது யூசுப் தலைமை வகித்தார். இயக்குநர் அமீர் இப்ராஹிம் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ரஜபுதீன் ஆண்டறிக்கை வாசித்தார். காரைக்குடி அழகப்பா பல்கலை., பதிவாளர் மல்லேஷ் பிரபு மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசினார். அவர் பேசுகையில், பட்டம் பெறும் மாணவர்கள் வேலை வாய்ப்பை பெறும் தகுதியை மட்டும் வளர்த்துக் கொள்ளாமல் வேலை வாய்ப்பை உருவாக்கும் மாணவர்களாக திகழ வேண்டும். பட்டம் பெற்ற மாணவ மாணவியருக்கு தாங்கள் சார்ந்த துறைகளில் அனுபவம் வளர்த்துக்கொண்டால் துறை சார்ந்த வேலை வாய்ப்பு, பணியிடத்தில் நன்மதிப்பு பெறலாம். சமுதாய வளர்ச்சியில் தங்களை முற்றிலும் ஈடு படுத்திக் கொள்ள முன் வரவேண்டும். பயின்ற கல்லூரி மாண்பை போற்றும் வகையில் பெற்றோரின் நன்மதிப்பை சமூகத்தில் நிறைவேற்றும் வகையிலும் தாங்கள் தங்களை தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். முகம்மது சதக் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் அலாவுதீன், சட்டமன்றமுன்னாள்உறுப்பினர் கே.ஹசன் அலி , ராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகிர் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி முதல்வர் நந்தகோபால், அஹமத் கபீர் பப்ளிக் முதல்வர் ஆலியா, இராமநாதபுரம் முஹம்மது சதக் ஹமீது கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் நதிரா பானு ஆகியோர் கலந்து கொண்டனர். பல்கலை., அளவில் தர வரிசை பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள், பட்டங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அனைத்து பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் செய்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!