Home செய்திகள் உத்ரகோசமங்கை ஆருத் தரிசன விழா ஜன.9 மாலை 6 மணி முதல் ஜன.10 காலை 6 மணி வரை 12 மணி நேர நாட்டியாஞ்சலி

உத்ரகோசமங்கை ஆருத் தரிசன விழா ஜன.9 மாலை 6 மணி முதல் ஜன.10 காலை 6 மணி வரை 12 மணி நேர நாட்டியாஞ்சலி

by mohan

இராமநாதபுரம சமஸ்தானம் தேவஸ்தானம் உத்ரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் ஆருத்ர தரிசன விழாவையொட்டி, மூலவர் பச்சைக் கல் மரகத நடராஜருக்கு ஜனவரி 9 ஆம் தேதி காலை 8 மணிக்கு சந்தனம் படி களையப்பட்டு 9 மணியளவில் மகா அபிஷேகம் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து தேவார இன்னிசை, மண்ணிசை, திருமுறை பாராயணம் நடைபெறுகிறது. இதன் தொடர் நிகழ்வாக ஜனவரி 9ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஜனவரி 10 ஆம் தேதி காலை 6 மணி வரை நாட்டியாஞ்சலி 2020 நடைபெறவுள்ளது. இது குறித்து ஆதி சிதம்பரம் ஆருத்ரா அபிநய நாட்டியாஞ்சலி அறக்கட்டளை தலைவர் முனைவர் பி.மாலதி செந்தில் குமார், செயலாளர் டாக்டர் பி. வித்யா பிரியதர்ஷினி ஆகியோர் கூறுகையில், உத்ரகோசமங்கையில் ஆதி சிதம்பரம் பச்சை மரகதக் கல் நடராஜர் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, 160 நடன, நாட்டிய கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டியாஞ்சலி முதல் முறையாக நடத்தப்படுகிறது. இதில் புதுச்சேரி, பெங்களூரு, தஞ்சை, சென்னை, பண்ருட்டி, திருவண்ணாமலை, ஆம்பூர், தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் நகரங்களில் இருந்து 24 குழுக்களைச் சேர்ந்த கலைஞர்களின் தனிநபர், இருவர் மற்றும் குழு பரத நாட்டிய நிகழ்ச்சி விடிய, விடிய நடத்தப்படுகிறது. அடுத்தாண்டு நடைபெறும் ஆருத்ர தரிசன நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். ராமநாதபுரத்தில் கடந்த 8 ஆண்டுகளில் எங்களது நாட்டியாஞ்சலி அகாடமி மூலம் 500 கலைஞர்களை உருவாக்கி உள்ளோம். 7 அரங்கேற்றம் நடத்தி உள்ளோம். ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் சேதுபதி ராணி ஆர்.பி.கே.ராஜேஸ்வரி நாச்சியார், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தக்கார் நா.குமரன் சேதுபதி, திவான் வி.கே.பழனிவேல்பாண்டியன், ராணி லட்சுமி நாச்சியார்,சரக பொறுப்பாளர் ராமு, டாக்டர் மதுரம் அரவிந்த ராஜ், டாக்டர் பரணி குமார் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். நாட்டிய கலைஞர்களுக்கு சென்னை நிருத்யஷேத்ரா டான்ஸ் அகாடமி நிறுவனர் ஆர்.முரளிதரன் பரிசு வழங்குகிறார் என்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!