Home செய்திகள் தென் தமிழகத்தில் முதன்முறையாக காற்றேற்றல் முறையில் மூச்சுக்குழாயை விரிவுப்படுத்தி சாதனை

தென் தமிழகத்தில் முதன்முறையாக காற்றேற்றல் முறையில் மூச்சுக்குழாயை விரிவுப்படுத்தி சாதனை

by mohan

சாலை விபத்தில் 25 வயது வாலிபர் தலையில் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் நான்கு மாதங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். முதற்கட்டமாக அவருக்கு மூச்சுப் பெருங்குழாய் மூலம் செயற்கை சுவாசம் அளித்து முதலுதவி மற்றும் சிகிச்சை முடித்துவீடு திரும்பினார். சில நாட்களுக்கு பின், அவருக்கு மீண்டும் சுவாச கோளாறு ஏற்பட்டுள்ளது. மூச்சுகுழாய் தொடர்பாக அளித்த பல சிகிச்சைகள் அவருக்கு பலனளிக்கவில்லை. இதனால் மூச்சு குழாய் அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. அந்த சிகிச்சை மிகவும் ஆபத்தான அறுவை சிகிச்சையை அந்த நோயாளி உடன்பட வில்லை. மாற்றாக, அப்போலோ சிறப்பு மருத்துவமனை மதுரைக்கு வந்தார்.

அப்போலோ சிறப்பு மருத்துவமனை நுரையீயல் நோய் சிகிச்சை நிபுணர்கள் கலந்து ஆலோசித்தனர். அந்த சுவாசக்குழாயில் அடைப்பை அகற்றி சுவாச தடையை நீக்குவதற்கான வழி வகைகள் கண்டறிந்த போது சுவாசக்குழாயின் உட்சுவர்கள் சிறுத்து இருப்பதை அறிந்தனர். புதிய செயல்முறையான பலூன் டைலேஷன் (காற்றேற்றல் முறை) எனப்படும் சுவாசகுழாயில் பலூன் போன்ற கருவி பொருத்தி சுவாச குழாயை விரிவுபடுத்தும் செயல்முறையை செய்ய திட்டமிட்டனர். மூச்சுக்குழாயில் செயல்முறையை திட்டமிட்டபோதிலும் சுவாச பாதையை மிகவும் கவனத்துடன் கண்காணிக்க முடிவுசெய்யப்பட்டது.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்ட அவருக்கு சுவாச பாதையில் ஏதும் பாதிப்பு ஏற்படாத வகையில் அதிக முன்னெச்செரிக்கையுடன் கை தேர்ந்த அதிக திறமை வாய்ந்த அனுபவமிக்க தீவிர மருத்துவ நிபுணர்கள் கண்காணிப்பில் மயக்கவியல் நிபுணர்கள் உதவியுடன் பலூன் டைலேஷன் எனப்படும் ட்ரகியோபிளாஸ்டி மேற்கொள்ளப்பட்டது. 48 மணிநேர கண்காணிப்பிற்கு பிறகு நோயாளியின் மேல் பக்க சுவாச குழாய் மூலம் சுவாச பாதையில் பலூன் போன்ற விரித்தன்மையுடைய கருவியை பொருத்தினர். சில மணி நேர கண்காணிப்பிற்கு பிறகு நோயாளியின் சுவாச பாதையில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டது. இந்த மொத்த சிகிச்சையும் மிகுந்த கவனத்துடன் கை தேர்ந்த மருத்துவ நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப கருவிகளின் தீவிர கண்காணிப்புடன் செயல்பட்டது. எந்நேரத்திலும் மூச்சு திணறல் ஏற்படாமல் இருக்க 24 நேர தீவிர கண்காணிப்புக்கு பிறகு நோயாளி எவ்வித சிரமமின்றி இயல்பு நிலைக்கு திரும்பினார். இம்முறை தென் தமிழகத்தில் முதன்முறையாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. மதுரை அப்போலோ மருத்துவமனையின் நுரையீரல் மருத்துவ சிகிச்சை நிபுணர் டாக்டர். ஹரிகிருஷ்ணன், மயக்கவியல் நிபுணர் டாக்டர் லட்சுமணன் ஆகியோர் அடங்கிய இக்குழு இம்முயற்சி மேற்கொண்டு இச்சிகிச்சையை செய்து முடித்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!