இராமேஸ்வரம் கடல் விபத்து…இருவர் பலி..

இராமேஸ்வரம் அருகே உள்ளது  வில்லூண்டி இந்த  கடற்கரையிலிருந்து இன்று மீன்பிடிக்கச்சென்ற மீனவர் சின்னச்சாமி (58) நடுக்கடலில்  மீன்பிடித்துக் கொண்டிருந்த போது தவறிவிழுந்து விட்டார். தவறி விழுத்த மீனவரை அவருடன் சென்ற சக  மீனவர்கள் உடனே கடலில் இறங்கி தேடி அவரது உடலை மீட்டனர். இறந்த மீனவரின் உடலை கரைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் உடல் கூறு சோதணைக்காக இராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் உடல் அனுப்பி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடலோர காவல்துறையினர்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே போல் மற்றொரு சம்பவத்தில் இராமேஸ்வரத்திற்க்கு சுற்றுலா வந்த கோவையைச் சேர்ந்த 40வயது மதிக்கத்தக்கவர் அக்னி தீர்தக்கடலில் குளிக்கும் போது பலியானர் இறந்தவர் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.