ரமலான் ஆன்மாவை வலுப்படுத்துகிறது. கட்டுப்பாட்டுடன் வாழ்க்கையை போதிக்கிறது. ரமலான் ஒரு ஆன்மீக பயிற்சிகளம்.
ரமலான் வழங்கும் ஆரோக்கியங்கள் நம்மை ஆச்சரியப் படுத்துகிறது. நாம்தான் கண்டு கொள்வதே இல்லை.
சஹர் உணவை முடிந்தவரை பிற்படுத்தியும், நோன்பு திறப்பதை முடிந்தவரை முற்படுத்தியும், இஸ்லாமிய வழிகாட்டல் நமக்கு சொல்லித் தருகிறது.
இன்றைய மருத்துவ உலகம் அதையே வழிமொழிகிறது. சூரிய உதயத்திற்கு நெருக்கமாக உண்பதையும், சூரியன் மறைந்தவுடன் உண்பதையும் (இஃப்தார் நேரம்) ஆரோக்கியம் என்கிறது மருத்துவ உலகம்.
நமது சஹர் உணவாக Protein அதிகம் இருக்கிற உணவுகள் (முட்டை, பால்) நார்ச்சத்து அதிகமுள்ள vegetables மற்றும் நீர்ச்சத்து அதிகமுள்ள பழங்கள் நீர் இவற்றை சஹர் உணவாக உண்ணுங்கள். இனிப்புகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள்.
ஏறக்குறைய 13-14 மணி நீண்ட நேரம் நமது உணவுப் பாதை முழு ஓய்வு கொள்கிறது. இதனால் உடல் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்கிறது.
நமது உடலில் தேவையான புதிய செல்கள் உருவாகி நமது உடலை புதிதாக கட்டமைக்கிறது.
நோன்பு திறக்கும்போது எண்ணெய் பலகாரங்களை அறவே ஒதுக்கி விடுங்கள்.
நல்ல பழங்களை கொண்டு நோன்பு திறங்கள். எண்ணெயில் பொறிக்காத Non veg சாப்பிடுங்கள். Grilled (சுட்ட) Non veg சாப்பிடுங்கள். Don’t eat fried items. பொறிக்கப்பட்ட எண்ணையில் மூழ்கடிக்கப்பட்ட பொருள்களை ( Fried) தவிர்த்து விடுங்கள். சிறிதளவு சோறு, ரொட்டி என எடுத்துக் கொள்ளுங்கள். அதுவே இரவு உணவாக முடியட்டும். இரவில் படுக்கும் போது பால் குடித்து அமைதியாக இருக்கும் இன்சுலினை தூண்டாதீர்கள்.
Low Carb High protein உணவுகள் வயிற்றில் கொழுப்புகள் சேராமல் உடல் பருமனாகாமல் தொப்பையில்லாமல் காப்பாற்றுகிறது.
ரமலானில் இதுபோன்ற உணவுகளை நல்ல இடைவெளிகளில் சாப்பிடும்போது உடல் ஆரோக்கியமாகிறது. செல்கள் தன்னை புதுப்பித்துக் கொள்வதால் Cancer மற்றும் ஹார்மோன் பிரச்சினைகளால் ஏற்படும் நோய்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
Ramadan is for fasting Ramadan is not for feasting.
ரமலானை ஆன்மீக விழா நாட்களாக நினைக்காமல் வகைவகையான உணவுத் திருவிழா நாட்களாக நமக்குள் விதைத்து கொண்டோம்.
ரமலான் என்றாலே வகைவகையான உணவுகள், வகைவகையான இனிப்புகள் என்று ஏற்படுத்தி கொண்ட புரிதல்களால்,
அய்சாம்மா…இந்த ரமலானில பச்சி, போண்டா வேண்டாம்.. உடம்புக்கு கெடுதல்னு சொல்றாங்க… அதனால வேணாம் என ரஹீம்மாமு சொல்ல…
ஏங்க… ஏதாவது ஒன்னை ஏதாவது ஒரு டாக்டர் சொல்லிக்கிட்டே இருப்பாரு…
டப்பா full லா பச்சி மாவை என்ன செய்ய என மொம்மானி புலம்ப,
பக்கத்தூட்டு அலமேலு அம்மாவுக்கு கொடுத்துரு.. அப்புறம் சாப்பட்டுபோட்டு நெஞ்சு எறியுது.. வயிறு எறியுன்னு சொல்லக் கூடாதுன்னு மாமு சொல்ல.. பச்சி மாவு பக்கத்து வீட்டுக்கு பயணமானது.
இந்த வருச நம்ம உணவு முறைய கடை பிடிச்ச அய்சாதாய் மொம்மானிகிட்ட Review கேட்டுக்கலாம்.
ரமலான் பசித்திருத்தலை அதன் ஆன்மீக ஆரோக்கிய நன்மைகளை நமக்கு புரியவைப்பதும், மனதை கட்டுப்பாடுகளால் வலுவாக்குவதும் நமக்கான வரம்.
நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களின் உணவு பேரீத்தபழமும் ஜம்ஜம் தண்ணீருமாக இருந்தது. அந்த எளிய உணவே மனித சமூகத்திற்கான பாடம்.
உண்ணுங்கள் பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள் என்ற திருமறையின் வரிகள் நமக்குள் ஏதாவது மாற்றம் நிகழ்த்த வேண்டும்.
சாப்பாட்டு மேசையில் பரவிக்கிடக்கும் சிதறிக்கிடக்கும் உணவுகளை விட எளிய உணவுகள் ஆன்மாவையும் உடலையும் வலுவாக்கும்.
உணவுமுறைகள் சரியாக இருந்தால் Hormone கலாட்டாக்கள் செய்யாமல் Insulin போன்ற Hormone கள் ஓய்வுகொள்ளும் போது உடல் மட்டுமல்ல மனமும் ஆரோக்கிய மடைகிறது.
இந்த ரமலானில் இதுபோன்ற உணவுகளை முயற்சியுங்கள்.
உடலாலும் உள்ளத்தாலும் நீங்கள் ஆசீர்வதிக்கப் படுவீர்கள்…!
கவிஞர், கப்ளிசேட்
You must be logged in to post a comment.