Home செய்திகள்உலக செய்திகள் மதுரையில் உலக மகளிர் தின விழா; முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் பங்கேற்று சிறப்புரை..

மதுரையில் உலக மகளிர் தின விழா; முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் பங்கேற்று சிறப்புரை..

by Abubakker Sithik

ஆண்கள் நேரத்துக்கு தகுந்த மாதிரி சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி மாறி கொள்வார்கள். பெண்கள் அப்படி மாற்றிக் கொள்ள மாட்டார்கள் என மதுரையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் ஆர்பி. உதயகுமார் பேச்சு

மதுரை காந்தி மியூசியம் அருகே உள்ள யூனியன் கிளப் கூட்டரங்கில் வைத்து உலக மகளிர் தின விழா பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார், சரவணா பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை சேர்மன் மருத்துவர். சரவணன், ஆடிட்டர் சேதுமாதவா, தொழிலதிபர் சூரஜ் சுந்தர சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மருத்துவத்துறை, கலைத்துறை, எழுத்துத் துறை, இப்படி பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மகளிருக்கு ஸ்த்ரி ரத்னா விருது வழங்கி கெளரவ படுத்தினர்‌.

இந்த விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயயகுமார் பெண்களை வாழ்த்தி பேசும் போது ஆண்கள் விருது வாங்கும் போது வீட்டில் உள்ள பெண்கள் கீழே அமர்ந்து பார்த்தோம். இன்று அவர்களுக்கு விருது வழங்கி கெளரவ படுத்துவதை கீழே அமர்ந்து பார்க்கிறோம்‌ என்றார். சர்வதேச மகளிர் தினம் இன்று ஜனாதிபதியாக பெண் ஒருவர் இருக்கிறார். மதுரையில் மீனாட்சி ஆட்சி புரிகிறார். முன்பெல்லாம் கணவருடைய பெயரை சொல்வதென்றால் அருகில் உள்ளவர்களை அழைத்து பெயரை சொல்லும் படி கூறிய காலம் மாறி இன்று
பெண்கள் ராக்கெட் ஏறி செல்கிறார்கள். இந்த மாற்றத்துக்கு காரணம் இது போன்ற விழாவை நடத்தி அமுக்கி வைக்கப்பட்ட, புதைத்து வைக்கப்பட்ட பெண்களின் திறமையை உலகத்திற்கு அடையாளம் காணும் விதமாக அன்பின் வடிவமாக இருக்கும் பெண்களின் பெருமையை உலகளாவிய சர்வதேச அளவில் போற்றி பாராட்டப்படுவதால் தான். இந்த காலம் மாற்றத்திற்கு காரணம் பெண்களால் தான் இந்த உலகம் இயங்கும் என இந்த நாடு சொல்கிறது. இந்த பாராட்டு ஆசீர்வாதம் எல்லோருக்கும் தேவைப்படுகிறது‌. மன்னிக்கும் குணம் பெண்களுக்கு தான் அதிகம் உள்ளது‌. அதனால் தான் பெண்களை கருணையின் வடிவம் என்கிறார்கள்‌.

தலைமுறையை உருவாக்க கூடிய பொறுப்பு 10 மாதம் குழந்தையை சுமக்கும் அந்த தெய்வீக சுமையை பெண்களுக்கு கடவுள் ஏன் கொடுத்திருக்கிறார். ஆண்களுக்கு பொறுமை இல்லை. அதை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தி பொறுமை நிதானம் கடமையும் பெண்களுக்கு இருக்கிற காரணத்தினால் தான் பெண்களுக்கு கடவுள் அந்த தெய்வீக சுமையை கொடுத்திருக்கிறார். பெண் குழந்தை பிறந்தால் சுமை என்ற காலம் மாறியதற்கு காரணம் யார்‌ என்றால் ஜெயலலிதா தான். பெண்களுக்காகவே சிந்தித்து சிந்தித்து எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தார். ஆண்கள் நேரத்துக்கு தகுந்த மாதிரி சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி மாறி கொள்வார்கள். பெண்கள் அப்படி மாற்றிக்கொள்ள மாட்டார்கள். எத்தனை கொடுமைகள், சோதனைகள், துன்பங்கள் , சுமைகள் சவால்கள் துயரங்கள் கண்ணீர் வந்தாலும் தன்னுடைய கருணை உள்ளம் மாறாதவர்கள் மகளிர் என்றார்.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!