Home செய்திகள் இராமநாதபுரத்தில் வருவாய்த்துறையினர் உண்ணாவிரதப் போராட்டம்..

இராமநாதபுரத்தில் வருவாய்த்துறையினர் உண்ணாவிரதப் போராட்டம்..

by Askar

இராமநாதபுரத்தில் வருவாய்த்துறையினர் உண்ணாவிரதப் போராட்டம்..

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் முன் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் இன்று (பிப்.13) உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க ராமநாதபுரம் மாவட்ட தலைவர் எஸ். பழனிக்குமார் கூறியதாவது: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மத்திய செயற்குழு முடிவின்படி, வருவாய்த்துதறை அலுவலர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்ட போராட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி தமிழகத்தின் அனைத்து வருவாய்த்துறை அலுவலர்களும் இன்று (பிப்.13) ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து, மாவட்ட தலைநகரில் உண்ணாவிரதம், அனைத்து பணிகளை புறக்கணிப்பு செய்து, அலுவலக வாயிலில் பிப்.22 முதல் தொடர் காத்திருப்புப் போராட்டம், 14 ஆயிரம் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொள்ளும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் பிப்.27 முதல் என இயக்க நடவடிக்கைகளை தொடர்ந்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2023 மே மாதம் சென்னை வருவாய் நிருவாக ஆணையர் அலுவலகத்தில் நடந்த காத்திருப்பு போராட்டத்தின் போது, வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் அரசு தலைமைச் செயலாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின், முதலமைச்சரின் உத்திரவின்பேரில், வருவாய்த்துறை அமைச்சர் போராட்ட களத்திற்கே நேரில் வந்து, அனைத்து கோரிக்கைகளும் உடன் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். இதை ஏற்று போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து 2023 மே 16 ல் வருவாய்த்துறை அமைச்சர், நிதித்துறை அமைச்சர், சட்டத்துறை அமைச்சர் மற்றும் அரசு செயலாளர்கள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தையில் 1 மாதத்தில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதன்பின், கடந்த 9 மாதங்களாக அரசு உயர் அலுவலர்கள், அமைச்சர்களை தொடர்ந்து வலியுறுத்தியும் முக்கிய கோரிக்கைகளின் மீது அரசாணை வழங்கப்படவில்லை. பணியிறக்கம் பெற்ற 3 அலுவலர்கள் இதுவரை மனஅழுத்தம் காரணமாக உயிரிழந்துள்ள நிலையில் மேலும் ஏற்பட்டுள்ள காலதாமதத்தை ஏற்க இயலாது. இன்னும் சில நாட்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலாகவுள்ளதால், அதற்கு முன் அரசாணை பெறவேண்டிய அவசியம் உள்ளது. இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்றம் தமிழக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டு 7 ஆண்டுகள் கடந்த நிலையில், இதற்கான விதி திருத்தம் மேற்கொள்ள தொடர்ந்து போராடி வருகிறோம். 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப முதலமைச்சர் ஆணையிட்டபின், காலம் கடத்துவது ஏன்? இப்போராட்டத்தில் அனைத்து நிலை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் தனி ஊதியம், இளநிலை வருவாய் ஆய்வாளர், தட்டச்சர் இடையேயான முதுநிலை தீர்வு, சான்றிதழ் மற்றும் பேரிடர் மேலாண் பணிக்கு கூடுதல் பணியிடங்கள், முக்கிய பணிகள் மேற்கொள்ள புதிய வாகனங்கள் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தியுள்ளனர். அரசின் முக்கிய திட்டங்களை எல்லாம் வருவாய்த்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து, இரவு பகல் ஓய்வின்றி பணிமேற்கொள்ள உத்தரவிடும் அரசு வருவாய்த் துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இத்தகைய தொடர் போராட்டம் நடைபெறுகிறது என்றார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!