Home செய்திகள் ராமேஸ்வரம் அருகே பாக் ஜலசந்தி கடல் பகுதியில் சுமார் 300 கிலோ எடை கொண்ட இறந்த பெண் டால்பின் !

ராமேஸ்வரம் அருகே பாக் ஜலசந்தி கடல் பகுதியில் சுமார் 300 கிலோ எடை கொண்ட இறந்த பெண் டால்பின் !

by Baker BAker

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாக்ஜலசந்தி கடல் பகுதியில் பவளத் திட்டுகள், கடல் பாசிகள், கடல் புற்கள், கடல் சங்குகள், கடல் ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை, பாலூட்டி இனத்தைச் சார்ந்த ஆவுளியா என்று அழைக்கப்படும் கடல் பசு, டால்பின் போன்ற அரிய வகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.இந்நிலையில் சமீப காலமாக மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை கடலில் ஆழமான பகுதியில் வாழும் கடல் பசு, டால்பின், புள்ளி திமிங்கலம் உள்ளிட்டவைகள் கரை ஓரங்களில் மீன் பிடியில் ஈடுபடும் சிறுதொழில் மீனவர்களின் வலையில் அதிக அளவு உயிருடன் சிக்கி பின் மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு கடலில் மீண்டும் விடப்பட்டு வருகிறது. இதனிடையே ராமேஸ்வரம் அருகே வில்லூண்டி வடக்கு கடற்கரைப் பகுதியில் இன்று காலை பெண் டால்பின் ஒன்று உயிரிழந்து கிடப்பதை பார்த்த அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த மண்டபம் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பினை பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் புதைத்தனர்.கரை ஒதுங்கிய பெண் டால்பின் 2 மீட்டர் நீளமும், 1 மீட்டர் சுற்றளவும் சுமார் 300 கிலோ எடையும் கொண்டது. மேலும் வயிற்றில் காயம் ஏற்பட்டு குடல் பகுதி வெளியே தெரிந்தது. எனவே இந்த டால்பின் மீனவர்கள் வலையில் அல்லது படகின் பின்புறம் உள்ள என்ஜின் விசிறியில் பட்டு காயம் ஏற்பட்டிருக்கலாம் என அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!