ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய் அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் எஸ் பழனி குமார் அறிவிப்பை தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகம் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வருவாய் அலுவலகங்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. வருவாய் ஆய்வாளர் செந்தில் விநாயகம் தற்காலிக பணிநீக்கம் செய்தது கண்டித்தும் , வருவாய் வட்டாட்சியர் பணியிடம் வழங்குவதில் முதுநிலைப்படி வழங்கி வந்த நிலையில் தற்போது விரும்பும் நபர்களுக்கு வருவாய் வட்டாட்சியர் பணியிடம் வழங்கியதை ரத்து செய்ய கோரியும் , பணிநீக்க ஆணையினை வீட்டின் சுவர்முன்பு ஒட்டி வருவாய்த் துறையினரை அவமானப்படுத்த அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் வலியுறுத்தி நடைபெற்றது. மேலும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.
80
You must be logged in to post a comment.