Home செய்திகள் இராமநாதபுரத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு!போட்டிகளில் வென்றோருக்கு பரிசு..

இராமநாதபுரத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு!போட்டிகளில் வென்றோருக்கு பரிசு..

by Askar

இராமநாதபுரத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு! போட்டிகளில் வென்றோருக்கு பரிசு..

இராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் தேசிய வாக்காளர் தின விழா இன்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், இந்திய தேர்தல் ஆணையம் வழிகாட்டல் படி, ஒவ்வொரு ஆண்டும் ஜன.25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனடிப்படையில் இன்று 14-வது தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. இதன் நோக்கம் வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே ஆகும். ஒவ்வொருவரும் நம் உரிமையை நிலை நிறுத்துவதற்கு வாக்குரிமை ஒன்றே பிரதானமாக இருந்து வருகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்து ஜனநாயக கடமையை நிலை நிறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி ஒவ்வொருவரின் வாக்கும் நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையக்கூடியதாகும். தேர்தல் நாள் அன்று நாம் வாக்களித்து என்ன நடக்கப்போகிறது என்ற நிலையை எண்ணாமல் நாம் வாக்களித்து சாதனை படைக்கலாம் என்ற நிலையை ஒவ்வொருவரும் மனதில் நிலைநிறுத்தி வாக்களிக்க வேண்டும். இளம் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களிப்பதை முதற்பணியாக செயல்படுவதுடன் புதிய வாக்காளர்களையும் ஊக்கப்படுத்த முன்வர வேண்டும். வாக்காளர்கள் தங்களுக்கான வாக்காளர் அடையாள அட்டையை பெற்று 100% வாக்காளர் அடையாள அட்டை பெறப்பட்டது என்ற நிலையை உருவாக்க வேண்டும். அது மட்டுமின்றி 18 வயது பூர்த்தியடைந்தோர் உடனடியாக வாக்காளர்களாக சேர்ந்திட வேண்டும். ஒவ்வொருவரின் வாக்கும் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பயனுள்ள ஒன்றாகும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.

300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி அரண்மனை பகுதியில் துவங்கி அரசு மகளிர் கலைக்கல்லூரியை வந்தடைந்தது. தேசிய வாக்காளர் தின உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. பள்ளி, கல்லூரி அளவில் நடந்த தேசிய வாக்காளர் தின பேச்சு, கட்டுரை, பாட்டு, ரங்கோலி போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் விஷ்ணு சந்திரன் பாராட்டுச்சான்று வழங்கினார். ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பிரபாகர், அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் சுமதி, தேர்தல் தாசில்தார் முருகேசன் (தேர்தல்), தாசில்தார் ஸ்ரீதரன் மாணிக்கம், அரசு மகளிர் கலைக்கல்லூரி பேராசிரியர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com