Home செய்திகள்மாநில செய்திகள் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 3,900 பேருக்கு ரூ.4 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி: அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்..

மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 3,900 பேருக்கு ரூ.4 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி: அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்..

by Askar

மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 3,900 பேருக்கு ரூ.4 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி: அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்..

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 3,900 பயனாளிகளுக்கு ரூ.4 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி, அரசின் பல்வேறு துறைகள் சார்பில் ரூ.20 கோடி மதிப்பில் மேற்கொண்ட 89 புதிய திட்டப் பணிகளை பிற்படுத்தப்பட்டோர் நலம், உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வருவாய், பேரிடர் மேலாண் துறை சார்பில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் 18 இடங்களில் துவங்கப்பட்டு மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.வரப்பெற்ற 4,386 மனுக்கள் மீது துறை ரீதியாக ஆய்வு செய்து 3,090 மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்து 13 துறைகள் மூலம் ரூ.4 கோடியே 25 ஆயிரம் மதிப்பில் 3090 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்பட்டன. எஞ்சிய மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து தீர்வு காண விண்ணப்பதாரர்களிடம் உரிய ஆவணங்கள் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அவர்களுக்கு உரிய நலத்திட்டங்கள் வழங்கப்படும் என தெரிவித்தார். ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.7.48 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட 44 திட்டப்பணிகள், பொதுப்பணித்துறை சார்பில் ரூ.1.77 கோடி மதிப்பில் புதிதாக 3 கால்நடை மருந்தகம், ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட சித்த மருத்துவ பிரிவு சிகிச்சை மையம், ராமேஸ்வரத்தில் ரூ.7.64 கோடி மதிப்பில் புதிய துணை மின் நிலையம், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.2.29 கோடி மதிப்பில் 39 புதிய மின் மாற்றிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று திறந்து வைத்தார். அரசின் பல்வேறு துறைகள் சார்பில் 3,900 பயனாளிகளுக்கு ரூ.4 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை பிற்படுத்தப்பட்டோர் நலம் உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.

ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ராமநாதபுரம்), முருகேசன் (பரமக்குடி), கருமாணிக்கம் (திருவாடானை) மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கெளர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குருதிவேல்மாறன், திட்ட இயக்குநர் மாவட்ட இயக்க மேலாண் அலுவலர் ஸையித் சுலைமான், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் உதிசைவீரன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வேலுச்சாமி, பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி, சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் மாரிச்செல்வி, பரமக்குடி வட்டாட்சியர் சாந்தி, பரமக்குடி நகராட்சி ஆணையர் (பொ) கண்ணன், வட்ட வழங்கல் வட்டாட்சியர் ஸ்ரீதரன் மாணிக்கம், பரமக்குடி நகர்மன்ற துணைத்தலைவர் குணசேகரன் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!