Home செய்திகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்த இளம் பெண் பலி;உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்.. 

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்த இளம் பெண் பலி;உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்.. 

by Askar

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்த இளம் பெண் பலி;உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்.. 

ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் அருகே மருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 33. கட்டடத் கூலி தொழிலாளி. இவரது மனைவி கீதா, 24. இவர்களுக்கு 2 வயதில் நைனிதா என்ற பெண் குழந்தை, 4 மாத ஆண் குழந்தை உள்ளனர். இந்நிலையில் செவிலியர்கள் அறிவுறுத்தல் படி, நயினார் கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ள கீதா இன்று காலை சென்றார். 7 பேருக்கு அறுவை சிகிச்சை நிறைவடைந்த நிலையில் 8 வது நபராக கீதாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது ரத்தப் போக்கு அதிகரிப்பால் உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் கீதா உயிரிழந்தார். நயினார் கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தவறான சிகிச்சையால் கீதா உயிரிழந்ததாக கூறி அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பதற்றம் நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டனர். மருத்துவ நிர்வாகம் சமரசம் பேசி உடன்பாடு ஏற்படாததால் தொடர் மறியலில் ஈடுபட்ட 15 க்கும் மேற்பட்டோரை போலீசார் குண்டு கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com