இராஜபாளையத்தில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி; 36 அணிகள் பங்கேற்பு!- முன்னாள் அமைச்சர்கே டி ஆர் துவங்கி வைத்தார்..

இராஜபாளையத்தில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி; 36 அணிகள் பங்கேற்பு!- முன்னாள் அமைச்சர் கே டி ஆர் துவங்கி வைத்தார்..

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் குறிஞ்சி கால்பந்தாட்ட குழு சார்பில் ஐந்தாம் ஆண்டு மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது இந்த போட்டியை முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி துவங்கி வைத்தார்.

இந்த ஐவர் கால்பந்தாட்ட போட்டியில் விருதுநகர் தேனி மதுரை திருச்சி நெல்லை தூத்துக்குடி தென்காசி நாகர்கோவில் பகுதிகளைச் சேர்ந்த 36 அணிகள் பங்கேற்றன 18 சுற்றுக்களாக நடைபெற்ற இந்த போட்டியில் நாக் அவுட் முறையில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசாக முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி சார்பில் 20 ஆயிரம் ரூபாயும் நினைவு கோப்பையும் வழங்கப்பட்டது இரண்டாவது பரிசுக்கு 15 ஆயிரம் ரூபாயும் மூன்றாவது பரிசுக்கு பத்தாயிரம் ரூபாயும் நான்காம் பரிசு ரூ.5,000 என வழங்கப்பட்டது போட்டி ஏற்பாடுகளை அதிமுக வடக்கு நகர செயலாளர் முருகேசன் செய்திருந்தார் தெற்கு நகர செயலாளர் பரமசிவம் , மேற்கு ஒன்றிய செயலாளர் அழகாபுரியான் மற்றும் கட்சி முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்