Home செய்திகள்கீழக்கரை செய்திகள் நத்தம் குளபதம் பகுதியில் சமீபத்தில் பெய்த மழையில் விளைபயிர்கள் நாசம்… அரசு நிவாரணம் அளிக்குமா?..விவசாயிகள் ஆதங்கம்…

நத்தம் குளபதம் பகுதியில் சமீபத்தில் பெய்த மழையில் விளைபயிர்கள் நாசம்… அரசு நிவாரணம் அளிக்குமா?..விவசாயிகள் ஆதங்கம்…

by ஆசிரியர்

கீழக்கரை தாலுகா நத்தம் குளபதம் பகுதியில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் அறுவடைக்காக காத்திருந்த பல ஏக்கர் நெற்பயிர்கள் நாசமடைந்தது.  இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக அப்பகுதியை சார்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், எங்களுடைய விளைநிலம் எங்கள் தாயார் காளிமுத்து (வேலு என்பவரின் மனைவி) பெயரில் உள்ளது, சமீபத்தில் பெய்த மழையில் ஒரு ஏக்கருக்கும் மேலே நெற்பயிர்கள் நாசமடைந்துள்ளது.  இது சம்பந்தமாக கிராம நிர்வாக அதிகாரியிடமும் தெரிவித்துள்ளோம்.  எங்களுடைய நிலைமையை அறிந்து தமிழக அரசு தகுந்த நிவாரணம் வழங்கினால் மிகவும் உதவியாக இருக்கும்” என வேதனையுடன் தெரிவித்தார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com