
தமிழக அரசு உத்தரவின்படி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணாக்கர் நலனுக்காக மேற்கொண்ட கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சென்று இன்று (19.01.2021) ஆய்வு செய்தார்.கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பள்ளி செல்லும் குழந்தைகளின்
பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, இணைய வழி பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் கெரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருவதையடுத்து பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை மூலம் பெற்றோர்களிடையே கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.
பெரும்பான்மையான பெற்றோரின் கருத்து படி 19.01.2021 அன்று முதற்கட்டமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.அதனடிப்படையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் 12 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான வகுப்புகள் இன்று துவங்கின. அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம், கை கழுவும் திரவம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமூக இடைவெளி கடைபிடிக்க ஒரு வகுப்பறைக்கு தலா 25 குழந்தைகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.இந்நிலையில் தொண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார். கொரோனா வைரஸ் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வந்தாலும், மாணவர்கள்
மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்,
முகக்வசம் கட்டாயம் அணிய வேண்டும், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல் போன்ற நடைமுறைகளை
தவறாமல் பின்பற்ற வேண்டுமென மாணவ, மாணவியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எஸ் சத்தியமூர்த்தி உடனிருந்தார்.
You must be logged in to post a comment.