75
கீழக்கரை தாசிம்பீவி மகளிர் கல்லூரி வளாகத்தில் மாநில அளவிளான ஆண்ககளுக்கான குர்ஆன் கிராத் போட்டி 29/12/2018 அன்று நடைபெற்றது. இப்போட்டிகள் இஸ்லாமியக் கலாச்சார அறக்கட்டளை, கீழக்கரை புகாரி ஆலிம் அரபிக் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்தின.
இப்போட்டி ஆண்களுக்கு மட்டும் என்று நிர்ணயித்து இருந்தாலும் கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மாணவிகளும் அதிகமாக கலந்து கொண்டதால், 15 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 15வயதுக்கு மேற்பட்டவர்கள் என இரு பிரிவாக மாணவிகளுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன். இதில் கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளியைச் சார்ந்த செய்யது அல் முஃபலிகா என்ற மாணவி முதல் பரிசை வென்றார்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை பள்ளியின் தாளாளர், முதல்வர், பொருளாளர் மற்றும் அனைத்து கல்விக் குழு உறுப்பினர்களும் பாராட்டி உற்சாகப்படுத்தினர்.
You must be logged in to post a comment.