தேர்தலை புறக்கணித்து கிராமத்திலேயே உள்ளிருப்பு போராட்டம்..

உசிலம்பட்டி அருகே குடிநீர் கேட்டு போராட்டம் நடத்திய 96பேர் மீது காவல் துறை பொய் வழக்கு போட்டுள்ளதாக கூறி தேர்தலை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டடுள்ளனர் பொதுமக்கள்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வி.பெருமாள்பட்டி கிராமத்தில் கடந்த ஓர் ஆண்டுகளாக முறையான குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து கடந்த 08.03.2019 அன்று உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு பெண்கள் மற்றும் கிராமமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களை கைது செய்த போலிசார் 72 பெண்கள் உள்பட 96பேர் மீது இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அன்று இரவு விடுதலை செய்தனர். அடிப்படை உரிமைக்காக போராட்டம் நடத்திய பெண்கள் உள்ளிட்டோர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும் வரும் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பு செய்யப் போவதாக தெரிவித்துள்ள பொதுமக்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் கிராமத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடும்ப அட்டைகளை அரசிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் என கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

செய்தி. வி.காளமேகம்..