உதவித்தொகை கேட்டு மாற்றுத்திறனாளிகள் முற்றுகைப்போராட்டம்..

ஓராண்டிற்கு மேலாக உதவித்தொகை வேண்டி காத்திருக்கும் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் உடனடியாக உதவித்தொகை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் 15.02.19 இன்று திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

அனைத்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் தமிமுன் அன்சாரி அவர்களும் வனிதா அவர்களும் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாவட்ட செயலாளர் பகத்சிங் சிறப்புரையாற்றினார்.

இப்போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று கண்டன முழக்கமிட்டனர். போராட்டத்திற்கு பின்னர் ஆத்தூர் தாசில்தார் அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் உடனடியாக உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஆத்தூர் தாசில்தார் உறுதியளித்ததன் அடிப்படையில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்