Home செய்திகள் அதிமுக., அமமுக., இணைப்பு: இணக்கமான முடிவை தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள் : அன்வர் ராஜா எம்.பி., கருத்து – வீடியோ..

அதிமுக., அமமுக., இணைப்பு: இணக்கமான முடிவை தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள் : அன்வர் ராஜா எம்.பி., கருத்து – வீடியோ..

by ஆசிரியர்

இராமநாதபுரத்தில் அன்வர் ராஜா எம்.பி., கூறுகையில், தமிழக உரிமையை மீட்டெடுக்க நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.,கள் கடுமையாக போராட வேண்டி உள்ளது. நாடாளுமன்ற செயல்பாடுகளை தமிழக எம்.பி.,கள் 30 நாட்கள் முடக்கியதன் விளைவாக தான் காவிரி மேலாண் வாரியம் அமைக்கப்பட்டது.

இந்திய அரசியலில் தேர்தலுக்கு முன், தேர்தலுக்கு பின் என கூட்டணி என்ற நிலைப்பாடு உள்ளது. வி பி சிங் அமைச்சரவையை பாஜ., கவும் ஆதரித்தன. கம்யூனிஸ்ட்களும் ஆதரித்தன. தேர்தலுக்கு முன் பிரதமர் வேட்பாளராக முன்னிலைபடுத்தப்பட்டவர் 5 பேர் மட்டுமே , ( ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, வாஜ்பாய், நரேந்திர மோடி ) தேர்தலுக்கு பின் பிரதமராக பொறுப்பிற்கு வந்துள்ளனர். வாக்குகள் சிதறாமல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான கூட்டல் கணக்கு தான் தவிர கூட்டணிக்கும், கொள்கைகளுக்கும் எவ்வித சம்பந்தமில்லை. நாடாளுமன்றத்திற்கு எத்தனை போகிறோம் என்பது தான் முக்கியம். இரட்டை இலை சின்னத்தில் வென்ற எம் எல் ஏ., கள் அவர்கள் கட்சி கொள்கை படி தான் முடிவெடுத்தனர். தேர்தலுக்கு பின் சூழ்நிலைக்கு அதிமுக மட்டுமல்ல அனைத்து கட்சிகளின் நிலைப்பாடாக உள்ளது. கூட்டணி என்றால் வாயை மூடி கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. தேர்தல் வெற்றி பெறுவதற்கான கூட்டணி அமையும். தேர்தலுக்கு பிறகு பாஜ., வை ஆதரிக்க மாட்டோம் என ஸ்டாலின் சொல்வாரா. கூட்டணி தொடர்பாக தலைவர்கள் மத்தியில் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

அதிமுக., வெற்றி பாதையில் அழைத்து செல்வது என்பது இபிஎஸ், ஓபிஎஸ் அறிவர். அதற்கான முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இன்று சட்டசபை தேர்தல் வந்தால் கூட எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதல்வராக வருவார். எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும். பார்லிமென்ட் தேர்தலில் தமிழகத்தில் அதிக இடங்களில் அதிமுக வெற்றி பெறும் என்பது எங்கள் நம்பிக்கை. கூட்டணி பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. பாஜ., மீண்டும் வெல்வதும், காங்., ஆட்சியை பிடிப்பதும் மக்கள் கையில் தான். கூட்டணி வைத்தாலும் , வைக்காவிட்டாலும் அதிமுக அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும். கூட்டணி கட்சிகளால் அதிமுகவுக்கு எந்த காலத்திலும் எந்த லாபமிருந்தது இல்லை. அதிமுக., வால் கூட்டணி கட்சிகளுக்கு பலன் உண்டு. அதிமுக தனித்து நின்று கடந்த காலங்களில் நூறு சதவீத வெற்றியை நிருபித்துள்ளோம்.

மக்கள் ஆதரவு தான் எங்கள் (அதிமுக) பலம். ஆட்சியை குறை சொல்வோர் சொல்லிக் கொண்டு தான் இருப்பர். மக்கள் நலன் ஒன்று தான் எங்கள் பணி. அதை தான் இந்த அரசு செய்து கொண்டிருக்கிறது. அது தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா எங்களுக்கு வகுத்து தந்த வழி. அதிமுக., அமமுக இணைவது தொடர்பாக தலைவர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை இணக்கமான முடிவு ஏற்பட்டால் தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதை ஏற்க மாட்டோம் என சொல்ல மாட்டார்கள் என்றார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!