வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி ராமநாதபுரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்….

கடந்த 2017-18 ஆம் ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு உடனே வழங்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன் இன்று (15/02/19) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலர் வி.மயில்வாகனன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில செயலாளர் ஏ. விஜய முருகன் பேசினார். மாவட்ட தலைவர் முத்து ராமு,மாவட்ட துணைத்தலைவர் ஆர். சேதுராமு, தாலுகா செயலர்கள் எஸ்.முருகேசன் (கீழக்கரை), பி.கல்யாணசுந்தரம் (ராமநாதபுரம் ), நவநீதகிருஷ்ணன் (கடலாடி மேற்கு), கே.ராசு (திருவாடானை), பொன்னுச்சாமி (கமுதி), தாலுகா தலைவர்கள் கே. ராமநாதன் (முதுகுளத்தூர்), பெரியசாமி (கடலாடி கிழக்கு), ஜெயபால் (பரமக்குடி) உள்பட பலர் பங்கேற்றனர் . மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

#Paid Promotion