Home செய்திகள் உசிலம்பட்டி பொது மயானத்தில் குப்பை கொட்ட வந்த ஊழியர்களை மயான வளாகத்திற்குள் வைத்து பூட்டுபோட்டதால் பரபரப்பு

உசிலம்பட்டி பொது மயானத்தில் குப்பை கொட்ட வந்த ஊழியர்களை மயான வளாகத்திற்குள் வைத்து பூட்டுபோட்டதால் பரபரப்பு

by mohan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டிலுள்ளது நகராட்சி பொது மயானம்.இதன் அருகே நகராட்சி சார்பில் குப்பைகளை தரம் பிரித்து உரமாக்கும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட உரக் கிடங்கு கட்டப்பட்டு செயல்படாமல் உள்ளது.இதனால் நகராட்சி சார்பி;ல் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் மயான வளாகத்திலேயே கொட்டி வந்தனர்.குப்பைகள் அதிகமாகும் போது அடிக்கடி குப்பைகளுக்கு தீ வைப்பதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்து வந்தது.இதனால் மயான வளாகத்தில் குப்பை கொட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் குப்பைகளுக்கு வைத்த தீ கடந்த ஒரு வாரமாக தீ தொடர்ந்து எரிந்து வருவதாகக் கூறப்படுகின்றது.இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் இன்று குப்பைகள் கொட்ட வந்த நகராட்சி ஊழியர்களை சிறை பிடித்து மயான வளாகத்திற்குள் வைத்து பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.சம்பவமறிந்த நகராட்சி அதிகாரிகள் பொது மக்களிடம் சென்று பேச்சு வார்த்தையில் குப்பைகளை கொட்ட மாற்று இடம் ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறியதைத் தொடர்ந்து ஊழியர்களை விடுவித்தனர்.மீண்டும் மயானத்தில் குப்பைகளை கொட்டினால் நாளை சாலை மறியலில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்தனர்.

உசிலை மோகன்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com