Home செய்திகள் தென்காசியில் தூய்மை பணியாளர்கள் முறையிடும் போராட்டம்..

தென்காசியில் தூய்மை பணியாளர்கள் முறையிடும் போராட்டம்..

by ஆசிரியர்

தென்காசியில் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் முறையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூய்மை பணியாளர்கள் குறைந்த பட்ச ஊதியம், சமூக பாதுகாப்பு பணி செய்ய போதுமான உபகரணங்கள், கொரோனா ஊக்கத் தொகை, இலவச வீட்டு மனையுடன் தொகுப்பு வீடு, போனஸ், உணவு, இஎஸ்ஐ, பிஎப் பிடித்தம், செய்து முறையாக கட்டுவது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் முறையிடும் போராட்டம் நடத்தினர். தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு நடந்த முறையிடும் போராட்டம் தென்காசி மாவட்ட ஏஐசிசிடியு தூய்மை பணியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் எம். வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. ஏஐசிசிடியு மாநிலத் தலைவர் சங்கர பாண்டியன் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். சிபிஐஎம்எல் தாலுகா செயலாளர் புதியவன் என்ற சுப்பிரமணியன் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரை நிகழ்த்தினார்.

முறையிடும் போராட்டத்தில் கட்டுமான சங்க மாவட்ட பொதுச் செயலாளர் செ. மாதவன், மாவட்ட கெளரவத் தலைவர் பி. பேச்சிமுத்து, மாவட்ட பொதுச் செயலாளர் ஜே. சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் வி.கே. பரமேஸ்வரி, விவசாய தொழிலாளர் சங்கத் தலைவர்கள் தம்பிதுரை, முத்துசாமி, ராமர் பாண்டியன், விவசாய சங்க தலைவர்கள், சேக்மைதின், சின்ன பாண்டியன், பீடி சங்கத் தலைவர்கள் அய்யம் பெருமாள், முத்துலட்சுமி, கட்டுமான சங்கத் தலைவர்கள் மாரியப்பன், குமார், பலவேசம், தூய்மை பணியாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள் முத்துகிருஷ்ணன், செல்வம், துர்காதேவி, தமிழரசி, குட்டி, குத்தாலிங்கம், முருகேஸ்வரி, மாரியம்மாள், சின்னத்தம்பி, வெள்ளத்தாய், பேச்சிமுத்து, சேகர், சின்னசக்கி, பிரியா, காளி, சின்னத்தாய், ஹரிஹரன், ஆறுமுகம், ஆண்டாள், வள்ளி, கலாராணி, சேர்மகனி, மாரிச்செல்வம் உட்பட தென்காசி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் இருந்து ஆண்கள் மற்றும் சுமார் 400க்கும் மேற்பட்ட தூய்மைப் பணி தொழிலாளிகள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!