Home செய்திகள் பணி நிரந்தரம் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்..

பணி நிரந்தரம் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்..

by ஆசிரியர்

இராமநாதபுரம், செப்.4- 

தமிழகத்தில் கடந்த  அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டடக்கலை, வாழ்வியல் திறன் ஆகிய 8 பாட பகுதி நேர ஆசிரியர்கள் மாத தொகுப்பூதியமாக ரூ. 10, 000 ஊதியம் பெற்று தமிழகம் முழுவதும் 12, 200 பேர் கடந்த 13 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். பணி நிரந்தரம் கோரி கடந்த 13 கல்வி ஆண்டுகளாக பலமுறை கோரிக்கை மற்றும் போராட்டங்கள் வாயிலாக வலியுறுத்தியும் பணி நிரந்தர படுத்தப்படாமல் வாழ்வாதாரம் இழந்து சமூகத்தில் மதிப்பிழந்த போதிலும் அரசு பள்ளி மாணவர்கள் நலன் கழுவி பணியாற்றி வருகின்றனர். கடந்த 2016 , 2021 தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுபவர் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. பணி நிரந்தரம் கோரி அனைத்து மாவட்டங்களிலும் ஆக. 21 ஆக.28 ல் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராமநாதபுரம் மாவட்த்தில் 193 பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தமிழக அரசு பள்ளி மாணவர்கள் நலன் கருதி குறைவான ஊதியத்தில் பணியாற்றி வரும் சிறப்பாசிரியர்களின் வாழ்வதாரம் கருதி ஆண்டுகளாக பாதித்துள்ள தங்களை பணி நிரந்தரம் வலியுறுத்தி  ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் லோகநாதன், மாநில தலைமை செயலர் ஹரிகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட  செயலர் வடிவேல் முருகன், பொருளாளர் பிரேம் குமார், மகளிரணி தலைவர் நாகேஸ்வரி, துணைத்தலைவர் மனோன் மணி உள்பட பகுதிநேர ஆசிரியர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இக்கோரிக்கை பரிசீலிக்கபடாமல் தாமதப்படுத்தினால், நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை செப் 21ல் சென்னை டிபிஐ வளாகத்தில் 12, 200 பகுதி நேர ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!