கொடைரோடு அருகே மயானத்திற்கு பாதை கேட்டு மறியல் ..

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பொட்டி செட்டிபட்டி காந்தி நகர் மக்கள் கடந்த 30 ஆண்டுகளாக இறந்வர் உடலை தங்களது மயானத்திற்கு கொண்டுசெல்ல பாதை கேட்டு போராடி வருகின்றனர். அதிகாரிகளுக்கு பல முறை மனு கொடுத்தும் பலனில்லை மற்றும் இன்று (14/10/2018) ஒருவர் இறந்து விட்டார் அவரை மயானத்திற்கு கொண்டு செல்ல வழியில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராமத்தினர் ஆண்,பெண் சிறுவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் பள்ளபட்டி கொடைரோடு சாலையில் போக்குவரத்து அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது தகவலறிந்த நிலக்கோட்டை தாசில்தார் நவநீதகிருஷ்ணன், துணை தாசில்தார் ருக்மணி வருவாய் ஆய்வாளர் செல்வி கிராம நிர்வாக அதிகாரி கலாஆகியோர் விரைந்து சென்று சமரசம் செய்தனர் அதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .