இலவச இருதய சிகிச்சை ஆலோசனை முகாம்…

இராமநாதபுரம் ஆரோக்யா மருத்துவமனை, மதுரை அப்பல்லோ மருத்துவமனை, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, நகர் வர்த்தகர் சங்கம் ஆகியன சார்பில் இராமநாதபுரம் ஆரோக்யா மருத்துவமனையில் இலவச இருதய நோய் சிகிச்சை மற்றும் ஆலோசனை முகாம் நடந்தது. இம்முகாமிற்கை லயன்ஸ் கிளப் முன்னாள் மாவட்ட ஆளுநர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். நகர் வர்த்தகர் சங்கத் தலைவர் ஜெகதீசன், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் ஹாரூண் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வின் முக்கிய நிகழ்வாக அப்பல்லோ மருத்துவமனை இருதய நோய் நிபுணர் டாக்டர் ஷங்கர், ஆரோக்யா மருத்துவமனை டாக்டர்கள் பரணிகுமார், வித்யா பிரியதர்ஷினி ஆகியோர் சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கினர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.