பொள்ளாச்சியில் நடைபெற்ற பெண்கள் மீதான பாலியல் கொடூரத்தை கண்டித்து த.மு.மு.க சார்பில் குவைத்தில் தி.மு.க கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்.

பொள்ளாட்சியில் நடைபெற்றுள்ள பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊடகங்கள் மற்றும் சமூக வலை தலங்கள் வழியாக உலகம் முழுவதும் இக்கொடூர சம்பவம் பரவியுள்ள நிலையில் உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்கள் பொள்ளாட்சி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.

குவைத் நாட்டில் முர்காப் என்னுமிடத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் குவைத் தலைவர் தஞ்சை.பாரூக் மகாராஜன் தலைமையில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாட்சியில் நடைபெற்றுள்ள பாலியல் வன்கொடுமைக்கு எதிராக குரலெழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க, காங்கிரஸ், த.மு.மு.க, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் குவைத் நாட்டுப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்கள் தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க தமிழக அரசும், காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.