நிருபர்களுடன் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடிய கிருஷ்ணகிரி எஸ்.பி…

பத்திரிக்கை பேட்டியின் போது நிருபர்களுடன் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடி பத்திரிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார்.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (30/12/2018) காலை 11 மணி அளவில் எஸ்.பி.மகேஷ்குமார் அவர்களின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பு முடியும் தருவாயில் திடிரென யாரும் எதிர்பார்க்காத வகையில் தனது வாகனத்தில் உள்ள கேக்கை எடுத்து வருமாறு ஓட்டுநருக்கு உத்தரவிட்டார்.

பின்னர் ஓட்டுநர் எடுத்து வந்த கேக்கை மூத்த நிருபரிடம் கொடுத்து வெட்ட சொல்லி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறினார். தொடர்ந்து எஸ்.பி.அனைத்து நிருபர்களுடனும் சேர்ந்து குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார்.

கிருஷ்ணகிரி தனி மாவட்டம் உருவானதில் இருந்து இதுவரை எந்த எஸ்.பி.யும் இதுபோன்று நிருபர்களிடம் இருந்ததில்லை. இன்று (30/12/2018) நடந்தது அனைத்து நிருபர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. போலீஸ் பத்திரிக்கயாளர்கள் நல்லுணர்வை ஊக்குவிக்கும் வகையில் இன்று கிருஷ்ணகிரி எஸ்.பி.மகேஷ்குமார் செய்தது அனைத்து பத்திரிக்கையாளர்களாலும் பாராட்டப்பட்டது.

செய்தி:- அஹமது, தூத்துக்குடி