புத்தாண்டு கொண்டாட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

தூத்துக்குடி மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள S. P. முரளி ரம்பா புத்தாண்டு கொண்டாட்டத்தை பாதுகாப்புடன் கொண்டாடவும் பொதுமக்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா வேண்டுகோள் விடுத்துள்ளார், இது தொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, புத்தாண்டை பொதுமக்கள் பாதுகாப்புடன் கொண்டாடும் நோக்கில் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர், இதன் படி புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றில் பந்தயம் வைத்து வாகனம் ஓட்டுபவர்கள் குடிபோதையில் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்

அதேபோன்று இருசக்கர வாகனத்தில் மூன்று நபர்கள் சென்றாலும், 18 வயதுக்குக் கீழே உள்ளவர்கள் இரு சக்கர வாகனம் ஓட்டினாலும், ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

பொது இடத்தில் மது அருந்துதல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா எச்சரிக்கை விடுத்துள்ளார், பாதுகாப்பான புத்தாண்டை கொண்டாட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

செய்திகள்:- அஹமது, தூத்துக்குடி