
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் புரெவி புயல் காரணமாக மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின்படி கீழக்கரை நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி தலைமையில் தலைமை பொறியாளர் முகம்மது மீரான், சுகாதார ஆய்வாளர் பூபதி, சுகாதார மேற்பார்வையாளர் சக்திவேல், எலக்ட்ரீசியன் ரமேஷ் ஜெயபிரகாஷ் மற்றும் ஊழியர்கள் கீழக்கரை கடற்கரை பகுதியில் உள்ள மரங்களை வெட்டி விட்டனர்.
அதைப்போல் மின்வாரிய சார்பில் கீழக்கரை தெருக்களில் மின் கம்பியில் மேல் விழுந்திருக்கும் மரங்களை மின்சார மின்பாதை ஆய்வாளர் வெல்லிமலை தலைமையில் சரவணன், வசந்த ராஜ், பாலா உள்ளிட்ட மின்வாரிய பணியாளர்கள் மின்கம்பியின் மீது விழுந்திருக்கும் மரக் கொப்புகளை வெட்டினார்கள்.
கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு
You must be logged in to post a comment.