கீழக்கரை திமுக சார்பில் உதவி பொருட்கள்……….

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் திமுக சார்பில் புரெவி புயல் எதிரொலியாக கீழக்கரையின் அமைந்துள்ள நான்கு புயல் நிவாரண முகாம்களை பார்வையிட்டனர். பின்பு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புயல் நிலவரத்தைப் பற்றி கேட்டறிந்தனர் திமுக சார்பில் மக்களுக்காக எந்த உதவி தேவைப்பட்டாலும் செய்வதற்கு தயாராக இருக்கிறோம் என்பதை நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தனர். மேலும் முகாம்களை பார்வையிட்டு மக்களுக்கு உணவு வகைகள் வழங்கப்பட்டது.

இதில் கீழக்கரை நகர் செயலாளர் பஷீர் அகமது, இளைஞர் அணி பொறுப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான், மாணவர் அணி அமைப்பாளர் இப்திகார் ஹசன், துணை செயலாளர் ஜமால் பாரூக் மற்றும் கென்னடி மாவட்ட பிரதிநிதி மரைக்காயர், முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் சாகுல் ஹமீது Ex Mc, தகவல் தொழில்நுட்பம் அணி சுஐபு இளைஞர் அணி பயாஸ்,நயீம் மற்றும் திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.