நெல்லையில் நடைபெற இருந்த கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு ஒத்திவைப்பு..

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கான நேர்முகத்தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ் அறிவித்துள்ளார்.

கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விண்ணப்பம் செய்தவர்களுக்கு திருநெல்வேலி , ப்ளாரன்ஸ் ஸ்வைன்சன் காதுகேளாதோர் உயர்நிலைப்பள்ளியில் 22.02.2019 ஆம் தேதி தொடங்கி  04.03.2019 ஆம் தேதி வரை நடைபெற இருந்த நேர்காணல் நிர்வாக காரணங்களினால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கான நேர்காணல் மீண்டும் நடத்துவது குறித்த விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்