மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோவில் மற்றும் சுந்தரராஜன்பட்டியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பானைகள் செய்யும் பணி படுஜோராக நடைபெற்று வருகின்றது. அழகர்மலை அடிவாரத்தில் இந்த மண்பானைகள் செய்யப்படுவதால் மூலிகை குணம் நிறைந்த தண்ணீர் மண்னில் கலப்பதால் பானைகளுக்கு தனி மவுசு உள்ளதாக வாங்கி செல்லும் பொதுமக்கள் கூறுகின்றனர். இதுதவிர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் போட்டிபோட்டுக்கொண்டு இப்பகுதிகளில் பானைகளை கொள்முதல் செய்து வருவதால் பானைகள் தற்போது பற்றாக்குறை நிலவுவதாகவும் , அதிகளவு ஆட்களை வைத்து பானைகள் செய்யப்பட்டுவருவதாக கூறுகின்றனர். இங்கு செய்யப்படும் பானைகள் சுமார் 30 ரூபாய் 300 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்பட்டு வருகின்றது. சீசன் காலங்களில் மட்டுமே மண்பானைகள் விற்பனை ஆவதாகவும் பிற நாட்களில் மிக குறைந்த அளவிலே விற்கப்பட்டு வருவதாக மண்பானை தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.