முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் பள்ளியில் காணும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்….

இராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா பள்ளி முதல்வர் திரு.நந்தகோபால் தலைமையில் கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் நமது தமிழர்களின் கலாச்சார உடையுடன் வந்திருந்து சமத்துவ பொங்கலை சிறப்பாக கொண்டாடினர்.

மாணவ, மாணவியர்களுக்கு பொங்கல் பண்டிகைகளின் சிறப்புகள் பற்றிய பேச்சு போட்டி நடைபெற்றது. பள்ளி மாணவ, மாணவர்களுக்கு மற்றும் ஆசிரியர்கள் இடையே பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளியில் பொங்கல் வைத்து அனைத்து ஆசிரியர்களும் சிறப்பாக கொண்டாடினர்.