63
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கிருஷ்ணன் கொட்டாய் கிராமத்தில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாஜக மகளிர் அணி சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் புதுபானையில் பால் ஊற்றியும், விவசாய நிலத்தில் விளைந்த புது பச்சை அரிசி போட்டு பானை நிறைந்து வழிந்ததை பார்த்து பொங்கலோ பொங்கல் என வரவேற்றனர். கரும்பு, மஞ்சள் என படையில் இட்டு அனைவருக்கும் பொங்கல் சாதம் கொடுத்தனர்.
இதில் தலைமை மாவட்ட மகளிர் அணி தலைவி விமலா, மாவட்ட தலைவர் வரதராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கிருஷ்ணவேணி, சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் மதிவதனகிரி, கணேசன், செல்லபாண்டி, சரவணன், நாகராஜ், முரளி, சிவா , முனிராஜ், செல்வராஜ், மனேரத்தினம், கிருஷ்ணவேணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தி:- சிங்காரவேலு, தர்ம்புரி
You must be logged in to post a comment.