தர்மபுரி பாஜக சார்பில் மாகசக்தி கேந்திர மாநாடு மற்றும் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம்…

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மல்லுப்பட்டி தனியார் மண்டபத்தில் பாஜக சார்பில் மாகசக்தி கேந்திர மாநாடு மற்றும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இதில் வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்தும், பொதுமக்களிடம் முத்ரா திட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் வங்கிகள் மூலம் எவ்வாறு கடன் பெற்று தங்களின் வாழ்வாதாரத்தை முற்னேற்றுவது, பாரத பிரதமர் மோடி அவர்களின் தலைமைலான அரசு பொதுமக்களுக்கு மத்திய அரசு மூலம் எனென்ன திட்டங்கள் நடைமுறையில் உள்ளது என்பதை பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைத்தார்.

மேலும் பாஜாகவில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதாக அளவில் இணைப்பது அவர்களுக்கு உடனடியாக உறுப்பினர் அட்டை வழங்குவது என ஆலோசனை செய்யப்பட்டது. கூட்டத்திற்கு வந்திருந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. இதில் தலைமை தொகுதி அமைப்பாளர் நாகராஜ், காரிமங்கலம் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், வெங்கட்ராஜ், குமார், பரத்வாஜ், மஞ்சுநாத், சுரேஷ், கோவிந்தராஜ், பரசுராமன் மற்றும் திரளான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி:- சிங்காரவேலு, தர்மபுரி