லோக்சபா தேர்தல் எதிரொலி தமிழகத்தை வலம் வரும் பாஜக தலைவர்கள் ..புதுவை முதல்வர் ராமேஸ்வரத்தில் பேட்டி ..

இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய புதுவை முதல்வர் நாராயனசாமி இன்று ராமேஸ்வரம் வந்தார்.

அவர் கூறியதாவது: அதிமுக., பாஜக இடையே ஏற்பட்டுள்ளது கூட்டணி அல்ல. அது கட்டாய கல்யாணம். அதிமுக.,வை வற்புறுத்தி இக் கூட்டணியை பாஜக அமைத்துள்ளது. மனரீதியாக அதிமுக., விற்கு பாஜக கூட்டணியில் சேர்வதற்கு விருப்பம் இல்லை. அதிமுக.,வில் பின்புலத்தை அறிந்து வைத்து கொண்டு நரேந்திர மோடி தமிழக ஆட்சியை ஆட்டிப்படைக்கும் செயலில் ஈடுபட்டள்ளார். அனைத்து கட்சியினருக்கும் தெரியும். அதிமுக என்பது பாஜகவின் பி- டீம்மாக செயல்பட்ட வருகிறது. கஜா புயலின் போது பாதிக்கபட்ட பகுதிகளை பார்வையிட வராத பிரதமர் தேர்தல் வருவதையடுத்து தமிழகத்தை சுற்றி சுற்றி வருகிறார். பிரதமர் மட்டுமல்ல பாஜக அனைத்து தலைவர்களும் தமிழகம் வருகின்றனர். மக்களை சந்திக்கின்றனர்.

ஆனால், கஜ புயலின் போது பிரதமர், மத்திய அமைச்சர்கள் எங்கே சென்றனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மின் உற்பத்தியை தொடங்கிய தூத்துக்குடி அனல் மின் நிலையத்தை துவக்கி வைக்க பாஜகவினர் இப்போது வருகின்றனர். இதனை எல்லாம் தமிழக மக்கள் உன்னிப்பாக பார்த்து கொண்டு இருக்கின்றனர் என்றார்.