Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் 1,21,398 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்..

இராமநாதபுரம் மாவட்டத்தில் 1,21,398 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு வழங்கும் முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவ ராவ் இன்று (19/01/2020) காலை தொடங்கி வைத்தார்.

ஆட்சித் தலைவர் கூறியதாவது: இளம்பிள்ளைவாதத்தை தடுக்கும் மருந்தே போலியோ சொட்டு மருந்து. சொட்டு மருந்து வழங்கும் முகாம், இந்தியாவில் உள்ள ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இன்று (19/01/2020) கொடுக்கப்படுகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் 1,229 மையங்களில் 4,912 பணியாளர்களை கொண்டு 1,21,398 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து அரசு மருத்துவமனைகள், வட்டார சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் நடைபெறுகிறது. 27 சிறப்பு குழுக்கள் மற்றும் 33 நடமாடும் குழுக்கள் மூலம் தற்காலிக குடியிருப்புகள் கோயில் திருவிழாக்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கல்யாண நிகழ்ச்சிகள் மற்றும் இலங்கை அகதிகள் முகாம் உள்ளிட்ட இடங்களில் உள்ள 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது மேற்கண்ட போலியோ சொட்டு மருந்து முகாம் களில் தங்களது 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி பயனடையலாம் என்றார்.

இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் எம். அல்லி, நலப்பணிகள் இணை இயக்குநர் பி.வெங்கடாசலம், துணை இயக்குநர் குமரகுருபரன், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் எம்.கே.ஜவஹர்லால், நிலைய மருத்துவர் பி.ஞானக்குமார், மூத்த மருத்துவர் மலையரசு, டாக்டர்கள் ஜெகதீசன், ரமீஸ் ராம்நாத், ஹில்ஜி, தாசில்தார் முருகவேல்,  நகராட்சி ஆணையர் விஸ்வநாதன்,  ரோட்டரி சங்க தலைவர் நாகராஜன், செயலாளர் மார்னிங் ஸ்டார் செந்தில்குமார், இன்னர்வீல் சங்கத் தலைவி கவிதா செந்தில்குமார், அரசு மருத்துவமனை தலைமை மருந்தாளுனர் ஜெய்சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!