காவலர் குடும்பத்தினருக்கான பொங்கல் பண்டிகை விளையட்டுப் போட்டிகள் துவக்கம்..! . 2024-ம் ஆண்டிற்கான பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை மாநகர காவல்துறை சார்பில் இன்று (௦6.01.2024) மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவலர் குடும்பத்தினருக்கான பொங்கல் பண்டிகை விளையட்டுப் போட்டிகளை மதுரை மாநகர காவல் ஆணையர் Dr.லோகநாதன்,IPS., துவக்கி வைத்தார்கள். மேற்படி துவக்க விழாவின் போது காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) .மங்களேஸ்வரன் மற்றும் காவல் துணை ஆணையர் (போக்குவரத்து). .குமார், காவல் உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் ஆகியோரும் உடனிருந்தார். மேற்படி விளையாட்டு போட்டிகளில் மதுரை மாநகர காவல்துறையினர் தங்களது குடும்பத்தினருடன் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டிகளின் தொடர்ச்சியாக, நாளையும் (07.01.2024) விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளதாகவும், 13.012024ம் தேதியன்று காலை பொங்கல் சார்ந்த போட்டிகளும் மற்றும் மாலை கலை நிகழ்ச்சிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெறும் என காவல் ஆணையர் அவர்கள் மேலும் தெரிவித்தார்.
செய்தியாளர்,வி.காளமேகம்
You must be logged in to post a comment.