Home செய்திகள் புளியங்குடி பகுதியில் இரண்டாம் நிலை காவலருக்கான மாதிரி தேர்வு; எம்எல்ஏ எம்.பி நகராட்சி சேர்மன் இணைந்து துவங்கி வைத்தனர்..

புளியங்குடி பகுதியில் இரண்டாம் நிலை காவலருக்கான மாதிரி தேர்வு; எம்எல்ஏ எம்.பி நகராட்சி சேர்மன் இணைந்து துவங்கி வைத்தனர்..

by mohan

புளியங்குடி பார்ட் கல்வி அறக்கட்டளை கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பு அளிக்கும் பணிகளை முன்னெடுத்து வருகிறது. இந்த கல்வி அறக்கட்டளை மூலம் புளியங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன் பெற்று வருகின்றனர். அந்த வகையில், தென்காசி மாவட்டம் புளியங்குடி பார்ட் கல்வி அறுக்கட்டளையின் பயிற்சி மையம் சார்பில் இரண்டாம் நிலை காவலுருக்கான மாதிரி தேர்வு நடத்தப்பட்டது. வருகிற டிசம்பர் 10, 2023 அன்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலுருக்கான எழுத்து தேர்வினை நடத்தவுள்ள நிலையில் அரசுப்போட்டி தேர்வாளர்கள் பயன்பெறும் வகையில் புளியங்குடி பார்ட் பயிற்சி மையம் அதற்கான மாதிரி தேர்வினை புளியங்குடி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் (டிசம்பர் 03) ஞாயிற்றுக் கிழமையன்று நடத்தியது. இந்நிகழ்ச்சியை வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். சதன் திருமலைக்குமார், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் M.குமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ. ராஜா ஈஸ்வரன், புளியங்குடி நகர்மன்ற தலைவர் விஜயா சௌந்திரபாண்டியன் ஆகியோர்கள் இணைந்து மாதிரி தேர்வை தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்விற்கு புளியங்குடி பார்ட் பயிற்சி மைய நிறுவனத் தலைவர் முஹைதீன் தலைமை தாங்கினார். செயலாளர் அப்துல் பாஸித் அலி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி துணை தலைமை ஆசிரியர் சுயம்புலிங்கம், வருவாய் ஆய்வாளர் அப்துல் கபூர், மருதம் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் கற்பகராஜா, பார்ட் பயிற்சி மைய பொருளாளர் ஷேக் அப்துல் கரீம், உறுப்பினர் சேக் காதர் மைதீன், அபு ஹனிபா, அப்துல் ஸலாம் மற்றும் பார்ட் பயிற்சிமைய நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரண்டாம் நிலை காவலர் மாதிரி தேர்வில் புளியங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான அரசுப்போட்டி தேர்வாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற அரசுப்போட்டி தேர்வாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com