மணல் கொள்ளையால் தமிழகத்தில் நீராதாரம் பாதிப்பு பா.ம.க., தலைவர் மணி இராமநாதபுரத்தில் பேட்டி… 

ஆற்று மணல் கொள்ளையால் . தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நீராதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பா.ம.க., மாநில தலைவர் ஜி.கே.மணி கூறினார். ‘வைகையை காப்போம்’ ’வறட்சியை விரட்டுவோம்’ விழிப்புணர்வு பிரசாரம் பா. ம. க., சார்பில் ராமநாதபுரத்தில் செப்.,2 ல் நடக்க உள்ளது. இதில் பா. ம. க., இளைஞரணி தலைவர் அன்புமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

இது தொடர்பாக பா.ம.க., மாநில தலைவர் ஜி.கே.மணி கூறியதாவது: வைகை ஆறு 25 சதவீதம் சேறு, சகதி நிரம்பியதால் தண்ணீர் வரத்துக்கால்வாய்கள் அடைப்படுள்ளது. இதனால் வைகை தண்ணீர் வரத்து பாதையை தூர் வரவேண்டும். காவிரி நீர் பாசன வசதிக்கு முழுமையாக கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். ராமநாதபுரம் பெரிய கண்மாய், ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய் உள்பட மாவட்டத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட கண்மாய்களை பராபட்சமின்றி மாவட்ட நிர்வாகம் தூர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழத்தில் நீர் மேலாண் திட்டங்களை முறையாக செயல்படுத்த வேண்டும். ஆற்றுப்படுகைகளில் தொடரும் மணல் கொள்ளையால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நீராதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தடை உத்தரவில் இருந்து விலக்கு பெற்று நீராதாரத்திற்கு இடையூறாக உள்ள சீமை கருவேல் மரங்களை மீண்டும் அகற்ற அரசு முனைப்பு காட்ட வேண்டும்.

சிவகங்கை மாவட்டத்தில் நீராதாரத்தை பாதிக்கும் யூகலிப்டஸ் மரங்கள் வளர்ப்பதை வனத்துறை கட்டுப்படுத்த வேண்டும். முல்லை பெரியாறு நீர்மட்டத்தை ஏற்கனவே உள்ள 152 அடியாக உயர்த்த கேரள அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். தமிழக மாணவர்களுக்கு மருத்துவ கல்விக்கு தடைக்கல்லாக உள்ள ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும். கடந்த காலங்களை போல் பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கையை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சில கல்வி நிறுவனங்களின் வருவாய் பெருக்கதிற்காக அமல்படுத்தி உள்ள ‘நீட்’ தேர்வை முற்றிலும் ரத்து செய்ய செய்ய வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டும். தினசரி விலை நிர்யண கொள்கையால் டீசல்,பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை வேண்டும். கடலுக்குச் செல்லும் காலங்களில் இலங்கை கடழ்படையால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர் விவகாரத்தில் மத்திய அரசு பராபட்சம் காட்டாமல் தமிழக மீனவர்களை இந்திய மீனவர் என்ற கண்ணோட்டத்துடன் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இயற்கை சீற்றத்தால் எல்லை தாண்டும் காலங்களில் தமிழக மீனவர்களை சிறைப்படுத்தும் நோக்கில் இலங்கை அரசு கொண்டு வந்துள்ள புதிய மீன்பிடி சட்டத்தை வாபஸ் பெற மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து நிர்வாகக்குழு முடிவெடுக்கும். தேர்தல் நேரத்தில் கூட்டணி விஷயத்தில் கொள்கை அடிப்படையில் அனைத்து கட்சிகளும் வெவ்வேறு கண்ணோட்டம் கொண்டுள்ளன. ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் என்பதில் நிரந்தர நிலைப்பாடு இல்லை. தமிழக வடமாவட்டங்களில் 100 சட்டசபை தொகுதிகளில் வெற்றி இலக்கு கொண்டு பா ம க பலப்படுத்தப்பட்டுள்ளது. இது போல் தென், மேற்கு மாவட்டங்களிலும் தொகுதிகள் தேர்வு செய்யப்பட்டு கட்சி பலப்படுத்த நிறுவனத்தலைவர் ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். தொழில், வேலைவாய்ப்பு, விவசாயம், நீர் மராமத்து உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் செயல்படாத அரசாக தமிழக அரசு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

மாநில பொருளாளர் திலகபாமா, மாநில இளைஞரணி செயலர் செந்தில், மாநில துணைத்தலைவர் ஆனந்தன், மாநில அமைப்பு செயலர் கபிலன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ஹக்கீம், சிவகங்கை மாவட்ட துணை பொது செயலர் திருஞானம், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் ராவுத்தர் கனி, திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் சரவணன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அப்துல் லத்தீப், மாவட்ட அமைப்பு செயலாளர் துரைராஜ், மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா, மாவட்ட துணை செயலாளர் சந்திரன், கீழக்கரை நகர் தலைவர் லோகநாதன், நகர் செயலாளர் பாசித், ராமநாதபுரம் நகர் செயலாளர் தாரிக், தலைவர் சதீஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

————/////——————/////—————-/////

#Paid Promotion