Home செய்திகள்கீழக்கரை செய்திகள் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப்பணியில் முறைகேடு: பாமக கண்டன தீர்மானம்..

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப்பணியில் முறைகேடு: பாமக கண்டன தீர்மானம்..

by ஆசிரியர்

இராமநாதபுரம், அக் 10 – இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாமக மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலர் அக்கிம் தலைமை வகித்தார்.  மாவட்ட தலைவர் சந்தனதாஸ் மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா முன்னிலை வகித்தனர். மண்டபம் ஒன்றிய செயலர் வெங்கடேசன் வரவேற்றார். 

தமிழக மீனவர் மீது இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் போராட்டம், கடலாடி தாலுகா சிக்கலை தலைமை இடமாக கொண்டு புதிய ஒன்றியம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடலாடி ஒன்றிய பாமக சார்பில் உண்ணாவிரத போராட்டம், முல்லைப் பெரியாறிலிருந்து ராட்சத குழாய்கள் மூலம் மதுரை வரை கொண்டு வந்துள்ள குடிநீரை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நீட்டிப்பு செய்து ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்னையை முழுமையாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,  ராமநாதபுரம் நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை அழித்து வரும் ஓஎன்ஜிசி நிறுவனம், சீமை கருவேல் மரங்களை முற்றிலுமாக அகற்ற வலியுறுத்தி போராட்டம்,  ராமநாதபுரம் நகர் சாலைகளில் நிரம்பி வழியும்  சாக்கடை கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும், புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணியில் முறைகேடு, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிகிச்சை அறை விபரம் குறித்து நுழைவாயிலில் வரைபடம் நிறுவ வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ராமநாதபுரம் நகர் செயலாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.

பசுமை தாயக மாநில துணைச்செயலர் கர்ண மஹாராஜா,  மாவட்ட துணை செயலாளர் ராசிக், ராமநாதபுரம்,  திருப்புல்லாணி, கடலாடி ஒன்றிய செயலர்கள் ஷரீப், மஹ்தும் கான், இருளாண்டி, திருப்புல்லாணி ஒன்றியத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட தொழிற்சங்க செயலர் லட்சுமணன், இளைஞர் சங்க செயலர் துல்கர், இளைஞர் சங்கத் தலைவர் ஸ்டாலின், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலர் இப்ராஹிம், மாணவர் சங்கச் செயலர் சந்தோசம், உழவர் பேரியக்கத்தலைவர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com