ஒட்டன்சத்திரம் பகுதியில் நடைபெற்ற சோதனையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்ட்டிக் பொருள்கள் பறிமுதல்..

திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தில் நகராட்சி ஆணையர் இளவரசன் தலைமையில் அதிகாரிகள் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து சோதனை நடத்தினர் இந்த சோதனையின்போது கடைகளில் இருந்த பிளாஸ்டிக் பைகள், டீ கப்புகள், பிளாஸ்டிக் இலைகள் என சுமார் 200 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது,

மேலும் இது தொடர்பாக இரண்டு கடைகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது மற்ற கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.