இராமநாதபுரத்தில் மனம் திருந்திய குற்றவாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்..

இராமநாதபுரம் மாவட்ட வருவாய்  அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர்(பொ) சி.முத்துமாரி தலைமையில் மக்கள்  குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (11/02/19) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்  இருந்து வருகை தந்த மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று அம்மனுக்களை ஆய்வு செய்து விரைந்து  நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை மாவட்ட வருவாய் அலுவலர்  அறிவுறுத்தினார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 11 பயனாளிக்கு தலா ரூ.2,460 வீதம்  ரூ.27,060 மதிப்பிலான காதொலிக்கருவிகளையும், ஒரு பயனாளிக்கு ரூ.7.170 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள், கள்ளச்சாராய தொழிலில் ஈடுபட்டு மனம் திருந்திய 3 பயனாளிகளுக்கு தலா ரூ.30,000-மதிப்பிலான 6 ஆடுகள் வீதம் 18 ஆடுகளை என 15 பயனாளிகளுக்கு ரூ.1,24,230 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவி உபகரணங்களை வழங்கினார்.

இக்கூட்டத்தில் சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் இரா.திருஞானம், மாவட்ட சமூகநல அலுவலர் குணசேகரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்  சி.தங்கவேலு உள்பட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து  கொண்டனர்..