இராமநாதபுரம் அருகே பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி..

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் மாவட்ட கிளை சார்பில் பெருங் களூர் கிராமத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட செயலாளர் எம். ராக்லாண்ட் மதுரம் தலைமை வகித்தார். பெருங்களூர் கிராமத்தலைவர் கரு.நா விஸ்வநாதன், துணைத் தலைவர் வீ.கருப்பையா, செயலாளர் சு.நீலமேகம், துணைச் செயலாளர்கள் ம.சுந்தரமூர்த்தி, ப.முருகேசன், பொருளாளர் பா.சுந்தர்ராஜ் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் சு.பாலமுருகன் வரவேற்றார். பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பாடல்கள், நடனங்கள், நாடகங்கள் நடத்தப்பட்டன. சேர்மன் எஸ்.ஹாரூன், நிர்வாகக்குழு உறுப்பினர் ஜூலியட் ஆகியோர் முன்னிலையில் மாணவர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் சிறப்பிடம் பிடித்த மாணவர் பி.ஹரீஷ், மாணவி ஆர்.சபீதா ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. இளைஞர் சங்க தலைவர் சு.ராம்குமார், துணைத்தலைவர் மு.வினித்குமார், செயலாளர் வி.செல்வம், துணைச் செயலாளர் கோ.முனியசாமி, பொருளாளர் லா. அண்ணாதுரை உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்தனர். பசுமை ரெட்கிராஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அ.மலைக் கண்ணன் அபர்ணா ஜி. திருமலை, விசு, ராஜராஜசோழன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்