தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியம் மெட்டில்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு விழா..

தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியம் மெட்டில்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி தலைமையில் இன்று (3.1.2019) நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளி மாணவää மாணவியர்களுக்கு நெகிழிக்கு மாற்றாக துணிப்பைகளையும்ää உலோகத்தால் ஆன குடிநீர் பாட்டில்களையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். மேலும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மெட்டில்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணியற்றி வந்த பட்டதாரி ஆசிரியை திருமதி சொ.பிரியதர்ஷினி பள்ளியின் பயன்பாட்டிற்காக ரூ.25,000 மதிப்பிலான ஸ்பிக்கருடன் கூடிய மைக்செட் கருவியை மாவட்ட ஆடசித்தலைவர் அவர்களிடம் வழங்கினார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது: மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வண்ணம் ஜனவரி 1ம் தேதி முதல் ஒருமுறை பயண்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்படும் என அறிவித்தார்கள். அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 6 மாத காலமாக பல்வேறு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது தடை செய்யப்பட்டுள்ள 14 வகையிலான பிளாஸ்டிக் பொருட்கள் கடைகள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதையும்,  கடைகளில் பயண்படுத்தப்பட்டு வருகிறதா என்பதையும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. எந்த ஒரு திட்டமும், விழிப்புணர்வும் பொது மக்கள் ஒத்துழைப்புடன் தான் சிறப்பாக செயல்படுத்த முடியும். பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு துணிப்பை வழங்குவதுடன் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன் படுத்தாமல் உலோக பாட்டிலை பயண்படுத்தும் விதமாக அவைகளையும் வழங்குவது மிகுந்த மகிழ்சிக்குரியதாகும். நாம் அனைவரும் சுற்றுச்சூழழுக்கு உகந்த பொருட்களை மட்டுமே பயண்படுத்த வேண்டும். இப்பள்ளியில் கல்வி புரவலர் திட்டத்தினை தொடங்கி நன்கொடை பெற்று அதன் வட்டி வருவாய் மூலம் பல்வேறு நிகழ்சிகளை, தேவைகளை செய்த வருவதும், பள்ளி தோட்டம் அமைத்து சத்துணவு காய்கறி, கீரை வகைகளை பயன்படுத்துவதும் இது ஒரு முன் மாதியான பள்ளியாக திகழ்கிறது. தொலைதூர கிராமத்தில் தொடங்கியுள்ள இந்த விழிப்புணர்வுகள் அனைத்து பகுதிகளையும் சென்றடைய வேண்டும். நெகிழி இல்லா தமிழகத்திற்கு அணைத்து தரப்பு மக்கும் ஒத்துழைப்பளிக்க வேண்டும் என பேசினார். முன்னதாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி தோட்டத்தினை திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும் கல்விப்புரவலர்களின் கல்வெட்டினையும் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.ச.சா.தனபதி, கோவில்பட்டி கோட்டாட்சியர் திருமதி.விஜயா, முதன்மை கல்வி அலுவலர் திரு.முருகேசன், வட்டாட்சியர் திரு.ராஜ்குமார், புதூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.சிவபாலன், திருமதி வசந்தா மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவää மாணவிகள்ää பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

செய்தி:- அஹமது, தூத்துக்குடி