தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு துணி பை வழங்கப்பட்டது…

ஹைவேவிஸ் பேருராட்சியில் வசிக்கும் தேயிலைத் தோட்ட தொழிலாளிகளுக்கு, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி, எம் நிர்மல்குமார்  தலைமையில், செயல் அலுவலர் நந்தகுமார் மஞ்சள் துணிப்பைகளை வழங்கினார்கள், சார்பு ஆய்வாளர் தனுஷ் கொடி பாதுகாப்பு வழங்கினார்.

தமிழக அரசின் அறிவிப்பின்படி பிளாஸ்டிக் ஒழிப்பு கடைபிடிக்க வேண்டும் என்றும், தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையிலும் துணிப்பைகள் வழங்கப்பட்டது, மக்களின் நலனே அரசின் கடமை என்றும், மக்களுக்காகவே சட்டம் இயற்றப்படும் என்றும், எனவே பொது மக்கள் அனைவரும் சட்டத்தை மதிக்க வேண்டும் என்றும் நீதிபதி அறிவுரை வழங்கினார்.

செய்தி:- பால்பாண்டி, தேனி