உத்தமபாளையம் பகுதியில் பிளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வை மற்றும் எச்சரிக்கை..

உத்தமபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் உள்ள கடை, வியாபாரத்தளம் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தப்படுவது பற்றி எச்சரிக்கை விடப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்ரமணி அவர்களின் உத்தரவுப்படி, மேற்பார்வையாளர் ராஜா, சுகாதார ஆய்வாளர் கருணா, ஜெகநாதன், வருவாய்த்துறை சார்பாக விஜயகுமார், காவல் துறை சார்பாக முத்துமாணிக்கம் ஆகியோர் கொண்ட குழுக்கள், ஹோட்டல், சூப்பர் மார்க்கெட் போன்றவற்றிற்கு நேரிடையாகச் சென்று ஆய்வு செய்து 14 வகையான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகள் பற்றி விளக்கமளித்தனர்.

மேலும் இருப்பு இருந்தால் அவைகளை பேரூராட்சியில் ஒப்படைக்க வலியுறுத்தியும், இனிமேல் பயன்படுத்தினால் அபதாரம் விதிப்பதுடன் சிறைத் தண்டனையும் அளிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

செய்தி:- பால்பாண்டி, தேனி