மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் சிறைவாசிகளை விடுவிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் செப்டம்பர் 15 – பேரறிஞர் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் முஸ்லிம்கள் உட்பட அனைத்து சிறைவாசிகளையும் பாரபட்சமின்றி விடுதலை செய்ய வலியுறுத்தி மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்ட செயலாளர் S.காஜா மொய்தீன் தலைமையில் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் வடக்கு பகுதி தலைவர் S.செய்யது இஸ்ஹாக் வரவேற்புரை நிகழ்த்தினார்.SDPI- கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் A.முஜிபூர் ரஹ்மான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாணவரணி அமைப்பாளர் பூபாலன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் சகோதரர் A.ஹாலித் முஹம்மது ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இறுதியாக வடக்கு பகுதி செயலாளர் S.சிக்கந்தர் நன்றியுரை நிகழ்த்தினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஜமாத்தார்கள், பெண்கள் குழந்தைகள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்