Home செய்திகள் தேசியத் தலைவர் படங்களை புதுப்பிக்க அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு….

தேசியத் தலைவர் படங்களை புதுப்பிக்க அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு….

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா காக்கூர் அருகே புளியங்குடி கிராமத்தில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பட்டா இடத்தில் சமுதாயக் கூடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தில் சட்ட மேதை அம்பேத்கர், சுதந்திர போராட்ட வீரர்கள் இமானுவேல் சேகரன், சுந்தரலிங்கம் உள்ளிட்ட தலைவர்களின் உருவப் படங்கள் வரையப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் முளைப்பாரி விழாவிற்காக தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக உருவப்படங்கள் புதுப்பிக்கப்படுவது வழக்கமாக இருந்தது. இந்தாண்டு நடைபெறவுள்ள முளைப்பாரி விழாவிற்கு படங்களை புதுப்பிக்க தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் முயன்றனர். அப்போது முதுகுளத்தூர் வட்டாட்சியர் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக சமுதாயத் தலைவர்கள், முதுகுளத்தூர் வட்டாட்சியரிடம் பல முறை மனு கொடுத்தும் புதுப்பிக்க அனுமதி கோரி வலியுறுத்தினர். ஆனால் இது தொடர்பாக வட்டாட்சியர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக தலைவர்களின் படங்களை அப்புறப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் சமுதாயத் தலைவர்கள் மீது வழக்கு போடுவதாக அதிகாரிகள் மிரட்டுகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக தேவேந்திர சமுதாய மக்களுக்கு பாத்தியப்பட்ட சமுதாய கூடத்தில் உள்ள தலைவர் படங்களை புதுப்பிக்க அனுமதி வழங்க வேண்டுமென புளியங்குடி கிராம மக்கள் சார்பில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜனிடம் மனு கொடுத்தனர்.

இது குறித்து புதிய தமிழகம் கட்சி மாநில நிர்வாகி கதிரேசன் கூறியதாவது: முளைப்பாரி விழாவிற்காக கடந்த 20 ஆண்டுகளாக கடைபிடித்து வரும் நடைமுறையை இந்தாண்டும் பின்பற்ற அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும். இல்லையேல் தேவேந்திர குல வேளாளர் மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com